உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சத்ய சாய்பாபா கோவிலின் 34வது ஆண்டு விழா!

சத்ய சாய்பாபா கோவிலின் 34வது ஆண்டு விழா!

சென்னை: ஸ்ரீசத்யசாய் அறக்கட்டளை சார்பில், சுந்தரத்தின் 34வது ஆண்டு விழா, கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில், சத்ய சாய்பாபா கோவில் அமைந்துள்ள ‘சுந்தரம்’ உள்ளது. இந்த கோவிலின், 34வது ஆண்டு விழாவைö யாட்டி, நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணிக்கு ஓம்காரம், சுப்ரபாதம், நகரசங்கீர்த்தனமும், காலை 6:15 மணிக்கு கோடியேற்று நிகழ்ச்சியும்  நடந்தது. காலை 6:30மணிக்கு, சீரடி சாய் மற்றும் சாய் சுந்தரேஸ்வரருக்கு, அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. காலை, 7:30மணிக்கு, பேரணி அதை தொடர்ந்து, பட கண்காட்சி திறப்பு விழா நடந்தன. அதையடுத்து, கருத்தரங்கம், மாலையில் வேதபாராயணம், ஆன்மிக இசை நிகழ்ச்சி,  பஜஜை, மகா மங்கள ஆரத்தி நடந்தன.  நேற்று, காலை, 6:15 மணிக்கு, கொடியேற்றமும், 6:30முதல், 9:30வரை, ஹோமமும், 10:30மணிக்கு,  ஸ்ரீசத்ய சாய் சகஸ்ரநாம அர்ச்சனையும், மாலை 11:30மணிக்கு வேத பாராயணமும் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !