திருவாதி தென் பெண்ணையாற்றில் திருவிழா கொண்டாட்டம்!
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அத்தியூர் திருவாதி தென்பெண்ணையாற்றில் நேற்று ஆற்றுத் திருவிழா நடந்தது. விழுப்புரம் மருதுõர், பெரியார் நகர், வழுதரெட்டி, கொளத்துõர், கண்டம்பாக்கம், சித்தாத்துõர், காவணிப்பாக்கம், சாணிமேடு, ஜானகிபுரம் உட்பட 33 பகுதிகளைச் சேர்ந்த அம்மன் கோவில் சாமிகள் நேற்று காலை ஊர்வலமாக அத்தியூர் திருவாதி ஆற்றங்கரைக்கு, கொண்டு வரப்பட்டது. ஆற்றில் சிறப்பு அலங்காரம் செய்து, சி றப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின் தங்கள் சொந்தப் பகுதிகளுக்கு அம்மன் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு, மேள தாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அத்தியூர் திருவாதி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் சேர்மன் புகழேந்தி, ஊராட்சி தலைவர் கணேசன், முக்கிய பிரமுகர்கள் மாயகி ருஷ்ணன், கலியபெருமாள், ஆறுமுகம், ரவி, கிருஷ்ணமூர்த்தி, ஜெகதீசன், சுப்ரமணியன், ராமமூர்த்தி ஆகியோர் பக்தர்களுக்கு தேவையான வசதிகள், அம்மன் அலங்காரத்திற்கு தேவையான பூஜை பொருட்களை வழங்கினர்.