ஆனைமலை மாசாணியம்மன் குண்டம் விழா!
ADDED :3919 days ago
ஆனைமலை: ஆனைமலை, மாசாணியம்மன் கோவில், குண்டம் திருவிழாவில், இன்று காலை கொடியேற்றம் நடக்கிறது. ஆனைமலை, மாசாணியம்மன் கோவிலில், தை அமாவாசையில், கொடியேற்றத்துடன் குண்டம் விழா துவங்குகிறது. விரதமிருந்த பக்தர்கள், நேற்று முன்தினம், வனப்பகுதிக்குள் சென்று, 81 அடி நீளமுள்ள, கொடிமரத்திற்கான மூங்கிலை வெட்டி எடுத்தனர். மூங்கிலுக்கு விபூதி, குங்குமம், பூக்கள் வைத்து பூஜை நடந்தது. பின், மூங்கிலை சுற்றி, மஞ்சள் புடவை கட்டி, 14 கி.மீ., தூரத்துக்கு, பக்தர்கள் தோளில் சுமந்து வந்தனர்.