குடியநல்லூர் கோவிலில் 22ம் தேதி கும்பாபிஷேகம்
ADDED :3918 days ago
தியாகதுருகம்: குடியநல்லூர் கிராமத்தில் நூற்றாண்டு பழமையான சிவன், பெருமாள், செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடக்கிறது. தியாகதுருகம் அடுத்த குடியநல்லூர் கிராமத்தில் நூற்றாண்டு பழமையான கயிலாயநாதர், வரதராஜபெருமாள், பிடாரி செல்லியம்மன் கோவில் உள்ளது. பக்தர்கள் முயற்சியால் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் கோவில் புதுப்பிக்கப்பட்டது. வரதராஜ பெருமாள் சன்னதி எதிரில் 15 அடி உயர ஆஞ்சனேயர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம்தேதி காலை 7 மணிக்கு பிடாரி செல்லியம்மன் கோவிலுக்கும், 9.30 மணிக்கு சிவன், பெருமாள் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர், ஊர்பொதுமக்கள் செய்துள்ளனர்.