உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை புனித லூக்கா ஆலய தேர்த்திருவிழா

வால்பாறை புனித லூக்கா ஆலய தேர்த்திருவிழா

வால்பாறை : புனித லுாக்கா ஆலயத்தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வால்பாறை கோ-ஆப்பரெடிவ் காலனியில் உள்ள, புனித லுாக்கா ஆலயத்தின் தேர்த்திருவிழா நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.திருக்கொடியை ஆலய பங்குதந்தை வினித்கருகம்பில் தலைமையில், திருப்பாடற்பலி நிறைவேற்றப்பட்டு, கொடியேற்றப்பட்டது. விழாவில் ஒவ்வொரு நாளும் மாலை 5.15 மணிக்கு திருப்பலி,மறையுரை, புனிதலுாக்கா நவநாள் நடக்கிறது. வரும் 24ம் தேதி மாலை 5.00 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலயபங்குதந்தை மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !