பணத்தை தண்ணீராக செலவழிக்காதே - என்பது ஏன்?
ADDED :3929 days ago
சில விஷயங்கள் பெரியவர்கள் கூறியதாக காலம் காலமாக வழக்கில் இருக்கின்றன. சாஸ்திர ரீதியாக இவற்றிற்கு பதில் கிடைக்காவிட்டாலும், அனுபவ ரீதியாக பலன் அளிப்பவையாகவே உள்ளன. இன்றைய சூழலில் பணத்தை விட தண்ணீர் கிடைப்பது அரிதான விஷயமாகி விட்டதால், பணத்தை தண்ணீராக செலவழிக்காதே என்று சொல்வது போய், இப்போது தண்ணீரைப் பணமாக செலவழிக்காதே என்று சொல்வது வழக்கில் வந்து விடும் போல தோன்றுகிறது.