உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முன்னோரை வழிபடுவோம்!

முன்னோரை வழிபடுவோம்!

சூரியன் தனது பயணத்தை வடக்கு நோக்கி துவங்கும் மாதம் தை. இந்த மாத அமாவாசை காலம் சென்ற பெற்றோர் மற்றும் முன்னோர் வழிபாட்டிற்கு உரியது. இந்த நாளில் அவர்களுக்காக விரதம் இருப்பதும், தீர்த்தக்கரைகளில் நீராடி தர்ப்பணம் செய்வதும் சிறப்பு. அன்று வாசலில் கோலமிடாமல் செம்மண் மட்டும் இட்டால் போதும். உச்சிப்பொழுதில் தர்ப்பணம் கொடுத்த பிறகு, அவர்களுக்கு படையல் இட வேண்டும். முன்னோர் ஆசி மூலம் வம்சவிருத்தி, தடைபட்டு வந்த சுபவிஷயங்கள் நடத்தல், புதுமுயற்சிகள் இனிதே நிறைவேறுதல் ஆகிய நற்பலன்கள் உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !