வீரட்டானேஸ்வரர் சுவாமி ஆற்றுத் திருவிழாவில் அருள்பாலிப்பு!
ADDED :3971 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் நடந்த ஆற்று திருவிழாவில் கீழையூர் வீரட்டானேஸ்வரர் கலந்து கொண்டு அருள்பாலித்தார். திருக்கோவிலு õர் தென்பெண்ணை ஆற்றில் நேற்று நடந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கீழையூர் வீரட்டானேஸ்வரர், அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர், ஏரிக்கரை மூலை இரட்டை விநாயகர், வீரப்பாண்டி வீரட்டானேஸ்வரர் சுவாமிகள் கலந்து கொண்டனர். காலை 9 மணிக்கு சுவாமிகள் ஆஸ்தானத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தென் பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது. தனித்தனியாக அமைக்கப் பட்டிருந்த பந்தலில் சுவாமிகள் சி றப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். டி.எஸ்.பி., ராஜேந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்பு எற்பாடுகளை செய்திருந்தனர்.