வேப்பமரத்தில் பால் பக்தர்கள் வழிபாடு
ADDED :3911 days ago
வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையம் அருகே, வேப்பமரத்தில் திடீரென பால் வடிந்ததால், பக்தர்கள் வழிபாடு செய்தனர். வேலாயுதம்பாளையம், அதியமான் கோட்டையை சேர்ந்தவர் செந்தில். இவரது வீட்டில் உள்ள வேப்பமரத்தில் திடீரென பால் வடிந்தது. தகவல் அறிந்த சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள், வேப்ப மரத்துக்கு மஞ்சள் துணிகட்டி, பொட்டு வைத்து சிறப்பு பூஜை நடத்தினர். சுற்று வட்டாரத்தை சேர்ந்த பலர் பைக், மொபட் உள்ளிட்ட வாகனங்களில் வந்து, வேப்பமரத்தில் பால் வடியும் அதிசயத்தை பார்த்துச் சென்றனர்.