உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தை அமாவாசை நாளில் சண்முகநதியில் குவிந்த பக்தர்கள்

தை அமாவாசை நாளில் சண்முகநதியில் குவிந்த பக்தர்கள்

பழநி : தை அமாவாசையை முன்னிட்டு பழநி சண்முகநதியில் நீராடிய பக்தர்கள், பழநி மலைக்கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். தை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் முன்னோரை நினைத்து நதிக்கரைகளில் சிறப்பு வழிபாடுகள் செய்து வழக்கம். அதன்படி நேற்று தை அமாவாசையை முன்னிட்டு பழநி சண்முகநதிக் கரையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி, எள், பச்சரி சாதம் படையல் படைத்தும், தீபம் ஏற்றியும் சிறப்பு வழிபாடு செய்தனர். பழநி மலைக்கோயிலுக்கு பால், மயில் காவடிகள், அலகு குத்தி, கிரிவலம் வந்து, நேர்த்திக் கடன் செலுத்தினர். மலைக்கோயில் பொதுதரிசன வழியில் 3 மணிநேரம் காத்திருந்து மூலவர் ஞானதண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர். பெரிய நாயகியம்மன்கோயில், பெரியாவுடையார் கோயில், சோளீஸ் வரர் உள்ளிட்ட சிவன்கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர் கள் பங்கேற்றனர். , பாலாறு- பொருந் தலாறு அணை, பச்சையாறு உள்ளிட்ட இடங்களிலும் வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !