மேலும் செய்திகள்
உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம்
3908 days ago
பாலுார் லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் தேரோட்டம்
3908 days ago
மயிலாடுதுறை: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடியில் ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் அம்மாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நடத்த ப்படும் நிகும்பலா யாகம் சிறப்பு வாய்ந்தது. நிகும்பலா யாகத்தில் கலந்து கொண்டு அம்பாளை தரிசித்தால் சத்ரு உபாதை நீங்கி சகல நன்மைகளும் கிடைக்கும். தை மாத அம்மாவாசையான நேற்று அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து காலை அம்பாளை கோயில் மண்டபத்தில் எழுந்தருள செய்து பூஜைகள் நடத்தப்பட்டன.மதியம் 1 மணிக் கு தண்டபானி குருக்கள் யாகத்தில் மிளகாய் வற்றல் கொட்டி நிகும்பலா யாகத்தை நடத்தி வைத்தார்.இ தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். யாகத்திற்கான ஏற்பாடுகளை சங்கர் குருக்கள் செய்திருந்தார்.அய்யாவாடிக்கு சிறப்பு பேருந்துகள் இய க்கப்பட்டன. நாச்சியார்கோயில் போலீஸ் மற்றும் ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
3908 days ago
3908 days ago