அம்பிகைக்கு முதல் மரியாதை!
ADDED :4311 days ago
சென்னை- கல்பாக்கம் புதுச்சேரி பாதையில் வேப்பஞ்சேரியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது நந்தம் திருத்தலம். இறைவன் செண்பகேஸ்வரர். இறைவி- சவுந்தர நாயகி. பார்வதி தேவியின் ஆயுதங்களான பாசம், அங்குசம் இல்லாமல் அபயவரதத்தோடு மேலிரு கரங்களில் தாமரை மலர்களை ஏந்தியபடி அம்பிகை தாமரை பீடத்தின் மேல் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். இங்கு அம்பிகைக்குத் தான் முதல் வழிபாடு செய்யப்படுகிறது. அதன் பிறகே மற்ற தெய்வங்களுக்கு பூஜைகள் நடைபெறுகின்றன. ஸ்ரீராமர், சீதை, லட்சுமணன் ஆகியோரும் இத்தலத்தில் அருள்பாலிப்பது ஓர் அதிசயம்.