திண்டுக்கல் புனித செபஸ்தியார் திருவிழா!
ADDED :3910 days ago
திண்டுக்கல் : திண்டுக்கல் நெட்டுத்தெரு புனித செபஸ்தியார் ஆலயத்தில் திருவிழா நடந்தது. ஜன., 11 ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் மாலை நவநாள் திருப்பலி நடந்தது. நேற்றுமுன்தினம் மாலை நகரின் முக்கிய வீதிகளில் தேர் பவனி நடந்தது. தொடர்ந்து பாதிரியார் ஸ்டேன்லி ராபின்சன் தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது.