ஈஸ்வரன் கோவில் கோபுரத்தில் வளரும் ஆலஞ்செடி!
ADDED :3910 days ago
திண்டிவனம்: திண்டிவனம் ஈஸ்வரன் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள ஆலஞ் செடியை அகற்ற வேண்டும். திண்டிவனம் நகராட்சி தீர்த்தக்குளம் அருகே அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் ஈஸ்வரன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் தினம் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நடக்கிறது. இக்கோவில் நுழைவு பகுதியில் உள்ள கோபுரத்தின் மீது ஆலஞ் செடி வளர்ந்துள்ளது. இதனால், கோபுரத்தில் விரிசல் ஏற்படும் நிலை உள்ளது. சிறிய அளவில் உள்ள செடி வளர்வதற்குள் அகற்றினால், கோபுரத்தில் ஏற்படும் பழுதுகளை தவிர்க்கலாம். ஈஸ்வரன் கோவில் கோபுரத்தில் உள்ள செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.