உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

தர்மபுரி: தர்மபுரி, சாலை விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா வரும், 26ம் தேதி நடக்கிறது. தர்மபுரி எஸ்.வி., ரோட்டில் அமைந்துள்ள, பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற சாலை விநாயகர் கோவிலில், பக்தர்களின் உதவியுடன் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேக விழா வரும், 26ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி, 24ம் தேதி காலை, 6 மணிக்கு கணபதி ஹோமம், விநாயகர் பூஜை, லட்சுமி ஹோமம், பூர்ணஹூதி, தீபாராதனையும், மாலை, 5 மணிக்கு வாஸ்து சாந்தி, புன்னியாவாசனம், முதல் காலயாக பூஜை, பூர்ணாஹூதி நடக்கிறது. 25ம் தேதி காலை, 7 மணிக்கு மகா சங்கல்பம், இரண்டாம் கால யாகபூஜை, பூர்ணாஹூதி தீபாராதனையும், மாலை, 5.30 மணிக்கு மூன்றாம் காலயாக பூஜையும், பூர்ணாஹூதி, மஹா கணபதிக்கு சோடசவுபசாரமும், தீபாரதனையும் நடக்கிறது. வரும், 26ம் தேதி விக்னேஸ்வர பூஜை நடக்கிறது. காலை 9 மணிக்கு மேல், 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. மதியம், 12 மணிக்கு விநாயகருக்கு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !