கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சுவாமி அக்னிபிரவேச வைபவம்
ADDED :4007 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மன் அக்னி பிரவேசம் நடந்தது. திருக்கோவிலூர் கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவிலில், அம்மன் அக்னி பிரவேச நிகழ்ச்சி நடந்தது. காலை 7.30 மணிக்கு கலச ஸ்தாபனம், ஆயிஷ்ய ஹோமம், பூர்ணாகுதி, சிறப்பு அபிஷேகம் நடந்தது. மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகள் மலர்களால் மூடப்பட்டு பூச்சொரிதல் நடந்தது. மதியம் 1.00 மணிக்கு மகா தீபாராதனை இரவு 7.00 மணிக்கு பால் அபிஷேகம் நடந்தது. ஆர்யவைசிய சமூகத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியை, முரளிதர சுவாமிகள் முன்னின்று நடத்தினார்.