பாதுகையின் ஆட்சி!
ADDED :5231 days ago
ஒரு சமயம் மகாவிஷ்ணுவின் சக்கரமும் சங்கும் பாதுகையிடம் தங்களைப் பற்றி பெருமையாகப் பேசிக் கொண்டன. நாங்கள் திருமால் கையில் அமர்ந்து மேன்மையாக இருக்கிறோம். நீ அரண்மனை வாயிலில்தானே உள்ளாய் என்றன. தன்னைத் தாழ்த்திப் பேசியது கேட்ட பாதுகை திருமாலிடம் கூறி வருத்தப்பட்டது. கவலைப்படாதே, நான் பூவுலகில் இராமாவதாரம் செய்யும் போது நீ கௌரவிக்கப்படுவாய். இதே சக்கரமும் சங்கும் பரதன், சத்ருக்னனாகப் பிறந்து உன்னை தலையில் தூக்கி வந்த அரியணையில் அமர்த்தி 14 ஆண்டுகள் வணங்குவார்கள் என ஆறுதல் கூறினார். அது அப்படியே நடந்தது.