தொடாமல் கெட்ட ராவணன்!
ADDED :5231 days ago
பிரம்மனின் பேரன் வசிரவசுவின் இரு மனைவிகளுக்கும் பிறந்தவர்கள் தான் குபேரனும், இராவணனும். இலங்கை முன்பு குபேரனிடம் தான் இருந்தது. அதை வஞ்சகமாக இராவணன் பெற்றுக் கொண்டு அரசாண்டான். அத்துடன் நில்லாமல் குபேரனிடம் இருந்த புஷ்பக விமானத்தையும் பிடுங்கிக் கொண்டான். இது போதாதென்று குபேரனின் மருமகள் ரம்பாவைப் பலாத்காரம் செய்ய முயன்றான். (அதனால் வந்த வினையை அவன் ஆயுள் முழுவதும் அனுபவித்தான்) ரம்பை ஆவேசமடைந்து, இராவணா! நீ அந்நிய மாதரை அவள் விருப்பமில்லாமல் தீண்டினால் தலை வெடித்து இறப்பாய் என சாபமிட்டாள். அதனால் தான் இராவணன் சீதையைக் கடத்தும் போது தரையுடன் பெயர்த்து எடுத்து வந்து அசோகவனத்தில் சிறை வைத்தான். தன்னை மணக்குமாறு அதிகாரம் செய்தான். சாபத்தை நினைத்து தொட பயந்தான். இப்படி தொடாமல் கெட்டவன் தான் இராவணன்.