உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றம்!

நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றம்!

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச விழா நாளை கொடியேற்றத்துடன் நடக்கிறது. நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் நாளை காலை 7.32 மணிக்கு கொடியேற்றத்துடன் தைப்பூச விழா துவங்குகிறது. ஜன., 28 புதனன்று கோயிலில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நடக்கிறது. இரவு பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி அம்பாள் வீதியுலா நடைபெறும். பிப்.,3 ல் தைப்பூச தீர்த்தவாரி விழா கைலாசபுரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள சிந்துபூந்துறை மண்டபத்தில் நடக்கிறது. பிப்.,4 இரவு ஏழு மணியளவில் நெல்லையப்பர் கோயில் சவுந்திரசபா மண்டபத்தில் நடராஜரின் திருநடனம் நடக்கிறது. பிப். 5 ல், நெல்லையப்பர் கோயிலின் அலங்கரிக்கப்பட்ட வெளித்தெப்பத்தில் பஞ்சமூர்த்திகளுடன் தெப்பதிருவிழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !