விநாயகர் கோவிலில் ஏகதின லட்சார்சனை!
ADDED :4272 days ago
காரைக்கால்: பொய்யாத மூர்த்தி விநாயகர் கோவிலில் ஏகதின லட்சார்சனை நடந்தது. காரைக்கால் மாதாக்கோவில் வீதியில் உள்ள கடைத்தெரு பொய்யாத மூர்த்தி விநாயகர் கோவிலில் 4ம் ஆண்டு ஏகதின லட்சார்சனை நடந்தது. விழாவையொட்டி காலை 7.00 மணிக்கு விநாயக பெரு மாளுக்கு அபிஷேகம், 8.00 மணிக்கு லட்சார்சனை ஆரம்பம், பகல் 12.00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. முன்னதாக வேதபாராயணம், ஆசி ர்வாதம், திருமுறை பாராயணம் நடந்தது. மாலை 5.00 மணிக்கு லட்சார்சனை துவங்கியது. இரவு 8.30 மணிக்கு மகாதீபாராதனை, வேதபாராயணம், ஆசீர்வாதம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.