உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் முருகன் கோவிலில் திருப்புகழ் திருப்படி விழா!

மயிலம் முருகன் கோவிலில் திருப்புகழ் திருப்படி விழா!

மயிலம்: மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் கோவிலில் திருப்படி மணிவிழா, திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி காலை அக்னி  குளக் கரையிலுள்ள விநாயகருக்கு அபிஷேகம், தீபாரதனைக்கு பின், பஜனைக் குழுவினர் மலைக் கோவிலுக்கு புறப்பட்டனர்.  திருப்படிகளை  பெண்கள் சுத்தம் செய்து வழிபாடு செய்தனர். மலைக்கோவில் வளாகத்திலுள்ள பாலசித்தர் , வள்ளி,தெய்வானை, சுப்பரமணியருக்கு சிறப்பு அபி ஷேகத்திற்கு பின், சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு மூலவர் காட்சியளித்தார். மயிலம் ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள்  ஆசியுரை வழங்கினார். மயிலம் தமிழ்க் கல்லூரியின் முன்னாள் முதல்வர் அறிமுகவுரையாற்றினார். மேலமங்கலம் குமாரசாமி தம்பிரான் திரு  விளக்கு வழிபாட்டின் பயன்கள் குறித்து பேசினார். முருகன் அருள் என்ற தலைப்பில் சிறுவன் நந்திகேஸ்வரன் பேசினார். கோவில் மண்டபத்தில்  காலை 10 மணிக்கு  420 பெண்கள் திருவிளக்கேற்றி  சிறப்பு  வழிபாடு செய்தனர்.  விழுப்புரம்  வள்ளியம்மை திருப்புகழ் சபை, வளையாம்பட்டு,  மேலமங்கலம், பஜனை கச்சேரி குழுவினர், கண்டாச்சிபுரம் கோலாட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !