உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராகவேந்திரர் கோவில் ஆண்டு துவக்க விழா!

ராகவேந்திரர் கோவில் ஆண்டு துவக்க விழா!

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் என். ஜி.ஜி.ஓ., நகரில் உள்ள ராகவேந்திரர் கோவில் கும்பாபிஷேக இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடந்தது. திருக்கோவிலூர், என்.ஜி.ஜி.ஓ., நகரில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரர் கோவில் கும்பாபிஷேக இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடந்தது. காலை 9:00  மணிக்கு கோபூஜை, ஆஞ்சநேயர், ராகவேந்திரர் சுவாமிகளுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம், 11:30 மணிக்கு மகா தீபாராதனை, பக்தர்களுக்கு  பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு பாவபோதக மகளிர் பஜனை மண்டலி சார்பில் பஜனை, லட்சார்ச்சனை, தீபாராதனை நடந்தது. கோவில் நிர்வாகி கோபிகிருஷ்ணன் தலைமையில் நடந்த பூஜையில்  பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !