ராமேஸ்வரம் கோயிலில் கருங்கல் மண்டபம்: ரூ.1 கோடியில் பணி துவக்கம்!
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் முன்புறம் உள்ள பழமையான முகப்பு மண்டபத்தை அகற்றி விட்டு, ரூ.1 கோடி செலவில் கருங்கல் மண்டபம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. ராமேஸ்வரம் திருக்கோயிலில் கும்பாபிஷேகத்தை இந்த ஆண்டு நடத்திட, ரூ. 7 கோடியில் கோயிலின் கிழக்கு, மேற்கு ராஜகோபுரங்கள், சுவாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் விமானங்கள் மராமத்து செய்து, வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. தற்போது சுவாமி சன்னதி முன்பும் உள்ள சேதுபதி கருங்கல் மண்டபம் போல், பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன் உள்ள 100 ஆண்டுகளுக்கு முந்தைய ஓட்டு மண்டபத்தை அகற்றிவிட்டு, கருங்கல் மண்டபம் அமைக்க கோயில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இப்பணியை மேற்கொள்ள சிருங்கேரி சாரதா பீட சுவாமிகள் முன்வந்துள்ளதை யடுத்து, நேற்று பழமையான ஓட்டு மண்டபத்தை அகற்றும் பணியை, ஊழியர்கள் துவக்கினர்.