உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி உலகளந்த பெருமாள் கோவிலில் கருடசேவை!

காஞ்சி உலகளந்த பெருமாள் கோவிலில் கருடசேவை!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில், நேற்று கருட வாகனத்தில் எழுந்தருளி வீதிவுலா வந்தார்.காஞ்சிபுரம் நகரில் உள்ள வைணவ தலங்களில், நான்கு ஆழ்வார்களால் பாடப் பெற்ற திருத்தலம், உலகளந்த பெருமாள் கோவில். இங்கு நான்கு திவ்ய தேசங்களை கொண்டு விளங்கி வருகிறது. இந்த கோவில் பிரம்மோற்சவம், கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் நாள், சப்பர வாகனத்தில் பெருமாள் புறப்பாடு நடைபெற்றது.முக்கிய நிகழ்வாக, கருடசேவை நேற்று காலை நடைபெற்றது.இதை முன்னிட்டு, நேற்று அதிகாலை 5:30 மணியளவில், திருமஞ்சனம் நடந்தது. அதை தொடர்ந்து, பெருமாள் அலங்கரிக்கப்பட்டு, கருட வாகனத்தில் எழுந்தருளி, காலை 7:30 மணியளவில் புறப்பட்டு, ராஜவீதிகளை சுற்றி வந்து, காலை 9:00 மணிஅளவில், கோவிலை சென்றடைந்தார். நேற்றிரவு, அனுமந்த வாகனத்தில் பெருமாள் புறப்பாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !