சாரதாம்பாள் கோவிலில் உபன்யாசம்!
ADDED :3913 days ago
புதுச்சேரி: சாரதாம்பாள் கோவிலில் நேற்று, ரங்கன்ஜீயின் குரு தர்சன உபன்யாசம் நடந்தது. கிருஷ்ணப்ரேமிக பஜனை மண்டலி சார்பில், எல்லப்பி ள்ளைச்சாவடி சிருங்கேரி சிவகங்காமடம் சாரதாம்பாள் கோவிலில், கடந்த 23ம் தேதி முதல் சமர்த்த ராமதாசரின் சரித்திரம் என்ற தலைப்பில் ர ங்கன்ஜீயின் உபன்யாசம் நடந்து வருகிறது. வரும் 1ம் தேதி வரை, தினமும் இரவு 7:௦௦ மணி முதல் 9:30 மணி வரை உபன்யாசம் நடக்கிறது. கடந்த 24ம் தேதி ராம தர்சனம், 25ம் தேதி காசி யாத்திரை, 26ம் தேதி அயோத்யா யாத்திரை உபன்யாசம் நடந்தது. நேற்று குரு தர்சனம் என்ற தலைப்பில் உபன்யாசம் நடந்தது. இன்று (28ம் தேதி) ஹனுமத் பிரதிஷ்டை, நாளை (29ம் தேதி), சிவாஜி சரித்திரம், 30ம் தேதி ராமதாச சிஷ்யர்களின் சரித்தரம், 1ம் தேதி ராம பட்டாபிஷேகம் என்ற தலைப்பில் உபன்யாசம் நடக்கிறது.