உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாங்கொளத்தூர் கோவில் கும்பாபிஷேக விழா

பாங்கொளத்தூர் கோவில் கும்பாபிஷேக விழா

திண்டிவனம்: திண்டிவனம் தாலுகா ஒலக்கூர் ஒன்றியம் பாங்கொளத்தூர் கிராமத்தில் மன்னாத சுவாமி சமேத பச்சைவாழியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு 24 ம் தேதி காலை 10.30 மணிக்கு கணபதி பூஜையுடன் யாக சாலை பூஜைகள் துவங்கின. மாலை 6 மணிக்கு முதல் கால பூஜை முடிந்தது. 25 ம் தேதி காலை 10 மணிக்கு கோபுர கலசம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. யாக சாலை பூஜைகள், பூர்ணாஹூ நடந்தது. இரவு 9 மணிக்கு அனைத்து சன்னதிகளிலும் சிலைகள் பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாத்தப்பட்டது. 26 ம் தேதி 4 ம் கால யாகசாலை பூஜை முடிந்து புனித கலசங்கள் கொண்டு வரப்பட்டு, அனைத்து சன்னதிகளின் கலசங்களுக்கும் புனித நீரால் மகா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னாள் ஒன்றிய தலைவர் சொக்கலிங்கம், ஊராட்சி தலைவர் ரமேஷ், துணைத் தலைவர் சாந்தி பாண்டுரங்கன், வார்டு உறுப்பினர்கள் வெங்கடேசன், முருகன், புவனேஸ்வரி, ராஜி, தீனதயாளன், ஊராட்சி செயலர் நாதமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !