சுந்தர ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :3914 days ago
திண்டிவனம்: திண்டிவனம் தாலுகா மயிலம் ஒன்றியம் அகூர் கிராமத்தில் சுந்தரவல்லி அம்மை உடனாய சுந்தர ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. விழாவை முன்னிட்டு 24 ம் தேதி மாலை நிலபதி வேள்வி மண் எடுத்து காப்பு அணிவித்தல் நடந்தது. இரவு 7 மணிக்கு கணபதி பூஜை, இரவு 11 மணிக்கு விமான கலசம் மற்றும் அனைத்து சன்னதிகளிலும் சிலைகள் பிரதிஷ்டையும் தொடர்ந்து அஷ்டபந்தனம் சாற்றினர். 25 ம் தேதி இரண்டாம் கால வேள்வி பூஜை நடந்தது. நேற்று யாக சாலை பூஜைகள் முடிந்து அனைத்து சன்னதிகளின் கலசங்களுக்கு புனித நீரால் மகா கும்பாபிஷேகம் நடந்தது. சென்னை சைவ பெருமன்றம் ஒளியரசு தலைமை தாங்கினார். மதுராந்தகம் திருக்குறள் பீடம் குருபழனி ஆதீனம் சிவத்திரு குருபழனி முன்னிலை வகித்தார். ஆடவல்லானின் அனுக்கத் தொண்டர் வடபுத்தூர் இளஞ்செழியன் மற்றும் கலந்து கொண்டனர்.