உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மண் சோறு சாப்பிடும் நிகழ்ச்சி!

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மண் சோறு சாப்பிடும் நிகழ்ச்சி!

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சமயபுரம் மாரியம்மன் பக்தர்கள் சார்பில் மண் சோறு சாப்பிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. விருத்தாசலம் சமயபுரம் மாரியம்மன் யாத்திரைக்காக கடந்த 24ம் தேதி பக்தர்கள் மஞ்சள் மாலை அணியும் நிகழ்ச்சி நடந்தது. இன்று (30ம் தேதி)   விருத்தகிரீஸ்வரர் கோவிலில் காலை 9:00 மணியளவில், பக்தர்கள் மண் சோறு சாப்பிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பிப்ரவரி 2ம் தேதி, ஜெகமுத்து மாரியம்மன் கோவிலில்  காலை 6:00 மணி முதல் இருமுடி கட்டுதலும்,  3ம் தேதி அதிகாலை 5:30  மணியளவில் பக்தர்களின் சமயபுர ரயில் யாத்திரையும் துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !