திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா!
ADDED :4206 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா நடந்தது. கோயிலில் ஜன. 21ல் கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் தினம் ஒரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தார்.
தெப்பத்திருவிழாவை முன்னிட்டு ஜி.எஸ்.டி., ரோட்டில் தெப்பக்குள தண்ணீரில் மிதவை தெப்பம் அமைக்கப்பட்டு, காலையில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க மூன்றுமுறை வலம் வந்து தெப்பத் திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.