உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி இடும்பன்மலை படிப்பாதை சேதமானதால் விபத்து அபாயம் !

பழநி இடும்பன்மலை படிப்பாதை சேதமானதால் விபத்து அபாயம் !

பழநி:பழநி இடும்பன் மலைக்கு செல்லும் படிப்பாதை சேதமடைந்து உள்ளதால் பக்தர்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. தைப்பூச விழாவை முன்னிட்டு பழநிகோயிலுக்கு பாதயாத்திரையாக ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். இந்த பக்தர்கள் முதலில் இடும்பனை வணங்கிவிட்டு, பின்பு மலைக்கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இடும்பன் மலைக்கோயிலில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை. மலைக் கோயிலுக்கு செல்லும் பாதையில் படிகள் சேதமடைந்துளளது. இதில் தவறிவிழுந்து பக்தர்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் இடும்பன் மலைக்கோயிலில் குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்துதரவேண்டும். சேதமடைந்துள்ள படிகட்டுகளை செப்பனிட பழநிகோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !