உடுமலை திருவிளக்கு வழிபாடு!
ADDED :3905 days ago
உடுமலை : உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், 108 திருவிளக்கு வழிபாடு, நடந்தது.
உடுமலை, பொள்ளாச்சி ரோட்டில் அமைந்துள்ளது பிரசன்ன விநாயகர் கோவில். கோவில் வளாகத்தில் உள்ள விசாலாட்சி அம்மன் சன்னதியில், ஜன., 30ம் தேதி, மாலை 6:00 மணிக்கு, 108 திருவிளக்கு பூஜை நடந்தது; ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
லட்சார்ச்சனை பூஜை:விசாலாட்சி அம்மனுக்கு வரும், 6ம் தேதி லட்சார்ச்சனை பூஜை நடக்கிறது. காலை, 6:00 மணிக்கு, ேஹாமமும், 7:30 மணிக்கு, அபிேஷகமும், காலை, 9:00 மணிக்கு, லட்சார்ச்சனை துவங்குகிறது. மதியம், 12:30 மணிக்கு, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, லட்சார்ச்சனையும், இரவு, 9:00 மணிக்கு, மகா தீபாராதனையும் நடக்கிறது.