உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலூர் நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு!!

கடலூர் நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு!!

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. கடலூர் பாடலீஸ்வரர் கோவில் நேற்று பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது.

மாலை 4:30 மணியளவில் நந்தி பகவானுக்குபால், தயிர், சந்தனம், மஞ்சள் போன்ற சிறப்பு
பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அருகம்புல் மாலை சாற்றி, மகா தீபாராதனை நடந்தது.
பண்ருட்டி: திருவதிகை அம்பாள் பெரியநாயகிசமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 5:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி, நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள்நடந்தது. மாலை 6 மணிக்கு தீபாராதனை நடந்தது.

விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !