உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் தைப்பூச விழா குவியும் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருப்பு!

பழநியில் தைப்பூச விழா குவியும் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருப்பு!

பழநி:தைப்பூச விழாவை முன்னிட்டு பழநி மலைக்கோயிலில் குவியும் பக்தர்கள் ஐந்து மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பாதயாத்திரைக்கு புகழ் பெற்ற பழநி தைப்பூச விழா துவங்கியுள்ளதால் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, காரைக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட கிரிவீதிகள், யானைப்பாதை, படிப்பாதைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இடும்பன் குளம், சண்முகநதியில் ஏராளமான பக்தர்கள் நீராடினர்.

நீண்டநேரம் காத்திருப்பு: வெளியூர் பக்தர்கள், ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் 2 மணிநேரம் காத்திருந்து மலைக்கோயிலுக்கு சென்றனர். மலைக்கோயில் வெளிப்பிரகாரம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியிருந்தால், 5 மணி நேரம் வரை காத்திருந்து, மூலவர் தண்டபாணி சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !