வடபழனியில் தைப்பூச திருவிழா நாளை பொது விருந்துக்கு ஏற்பாடு!
ADDED :3907 days ago
வடபழனி: வடபழனி முருகன் கோவிலில், நாளை (பிப்.3) தைப்பூச திருவிழா நடக்கிறது.
இதையொட்டி, மதியம் 2:00 மணிக்கு, காவடி, பால்குடம் ஏந்தி ஊர்வலம், பால் அபிஷேகம் நடக்கிறது.
மாலை 6:00 மணிக்கு, அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை ஆகியவை நடக்கிறது. இதையடுத்து, இரவு 8:00 மணிக்கு சுவாமி திருவீதி புறப்பாடு நடக்கிறது. இந்த ஆண்டில் தைப்பூசம் மற்றும் அண்ணா நினைவு நாள், நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி, மதியம் 12:00 மணிக்கு சிறப்பு வழிபாடு, பொது விருந்து நடக்கிறது.