பெருமாள் கோவிலில் மகா சம்ப்ரோட்சணம்!
மாம்பலம்: மேற்கு மாம்பலம், பாஷ்யகார ஆதிசென்ன கேசவ பெருமாள் கோவிலில், வரும் 9ம் தேதி, மகா சம்ப்ரோட்சணம் நடக்கிறது.
மேற்கு மாம்பலம், கோவிந்தன் சாலையில் பாஷ்யகார ஆதிசென்ன கேசவ பெருமாள் கோவில் உள்ளது. அங்கு, 2014, அக்., 30ம் தேதி, பாலாலயம் நடந்தது. திருப்பணிகள் முடிந்த நிலையில், பிப்., ௯ம் தேதி, மகா சம்ப்ரோட்சணம் நடக்கிறது.
அதையொட்டி, பிப்., 6ம் தேதி, காலை 6:00 மணிக்கு, பாலாலய பட உத்வாசனம், யாகசால
நிர்மாணார்த்தம் சாற்று முறை உள்ளிட்டவையும், பிப்., 7ம் தேதி, காலை 7:00 மணிக்கு, முதல்
யாகசாலை பூஜையும் துவங்குகின்றன. பிப்., 9ம் தேதி, காலை 6:00 மணிக்கு ஐந்தாம் கால யாகசாலை பூஜை முடிவடைந்து, காலை 6:30 மணிக்கு மேல் 10:30 மணிக்குள், மூலவர் விமானம் உள்ளிட்ட அனைத்து சன்னிதிகள், விமானங்களுக்கும் மகா சம்ப்ரோட்சணம் நடக்கிறது. காலை 11:30 மணிக்கு பாஞ்சராத்ர ஆகம சாற்றுமுறை, வேத பிரபந்த சாற்றுமுறை, தீர்த்தம், சடாரி, பிரசாத வினியோகமும், இரவு 8:00 மணிக்கு, பெருமாள் புறப்பாடும் நடக்கிறது.