உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மல்லிகேஸ்வரர் கோவிலில் வரும் 11ம் தேதி கும்பாபிஷேகம்!

மல்லிகேஸ்வரர் கோவிலில் வரும் 11ம் தேதி கும்பாபிஷேகம்!

அசோக் நகர்: அசோக் நகர், மல்லிகேஸ்வரர் கோவிலில், வரும் 11ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.

அசோக் நகர், காவலர் குடியிருப்பு வளாகம் அருகே உள்ள, மஹேஸ்வரி அம்பிகா சமேத
மல்லிகேஸ்வரர் கோவிலில், கடந்த ஆண்டு நவ., 12ல், பாலாலயம் நடந்தது. இதையடுத்து, சுவாமி, அம்பாள் விமானம் பழுது பார்த்தல், சண்டிகேஸ்வரர், நவக்கிரகம், காலபைரவர், சூரியன், சந்திரன், சனி, பிரகார மண்டபங்கள் புதுப்பிக்கும் பணி நடந்து முடிந்தது. வரும் 11ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. வரும் 9ம் தேதி காலை 6:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமமும், மாலை, 6:00 மணிக்கு, முதல் கால யாக பூஜையும், தீபாராதனையும் நடக்கிறது.

11ம் தேதி, காலை, 7:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், காலை, 9:30 மணிக்கு கடம்
புறப்பாடும், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும் நடக்கிறது.இதையடுத்து, காலை 10:00 மணிக்கு, விமான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகமும், 10:15 மணிக்கு, மூலவர் மகா கும்பாபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதலும், இரவு 7:30 மணிக்கு, சுவாதி திருக்கல்யாணமும் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !