உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் கும்பாபிஷேகம்!

கோவில்களில் கும்பாபிஷேகம்!

உடுமலை : உடுமலை ரத்தினலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், இன்று நடக்கிறது.
உடுமலை, தில்லை நகரில் அமைந்துள்ளது, ரத்தினாம்பிகை உடனமர் ரத்தினலிங்கேஸ்வரர் கோவில். கோவில் கும்பாபிஷேகம் விழா, கடந்த ஜன., 30ல் துவங்கியது.

31ம் தேதி காலை முதல் காப்பணிவித்தல் உள்ளிட்ட வழிபாடுகளும், மாலை, 6:30 மணிக்கு
முதற்கால வேள்வியும் நடந்தன. நேற்று காலை, 9:30 மணிக்கு, இரண்டாம்கால வேள்வியும், 10:30 மணிக்கு, விமான கலசம் நிறுவுதலும், மாலை, 5:30 மணிக்கு, மூன்றாம் கால வேள்வியும் நடந்தன.இன்று காலை, 5:30 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சி, மூலமூர்த்திகளுக்கு ஆனைந்தாட்டல், காப்பணிவித்தலும், காலை 6:00 மணிக்கு, சண்டேச நாயனார், பைரவர், நந்தி உள்ளிட்ட சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

காலை, 7:00 மணிக்கு ரத்தினலிங்கேஸ்வரருக்கு நான்காம் கால வேள்வியும், காலை, 9:00 மணிக்கு, திருக்குடங்கள் புறப்பாடும், 9:30 மணிக்கு, விமானங்களுக்கு கும்பாபிஷேகமும் நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு மூலமூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, காலை, 10:30 மணிக்கு, அருளாளர்கள் அருளுரையும், 11:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும், 11:30 மணிக்கு, பேரொளி வழிபாடும், மாலை, 5:00 மணிக்கு, சுவாமி திருவீதியுலாவும், இரவு, 7:00 மணிக்கு, பள்ளி மாணவியரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது.

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் விழா நடைபெறுகிறது.

பொள்ளாச்சி பாலக்காடு ரோடு வடுகபாளையத்தில் அமைந்துள்ளது அங்காள பரமேஸ்வரியம்மன் கோவில். இக்கோவிலில் இன்று காலை 4:30 மணி முதல் கும்பாபிஷேகம் விழா நடைபெறுகிறது.

இதற்காக கடந்த மாதம் 31ம் தேதி முதல் யாகபூஜைகள் நடந்து வருகின்றன. இன்று காலை 4:30 மணி முதல் நான்காம் கால யாக பூஜை, வேதிகார்ச்சனை, தத்துவார்ச்சனை, நாடி சந்தானம், மகா பூர்ணாஹுதி, விநாயகர், வள்ளி, முருகன், தெய்வானை, நவகிரகம், அண்ணாமலையார் கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதையடுத்து, 6:45 மணிக்கு யாக சாலையில் இருந்து அபிஷேகம் குடம் புறப்படுகிறது. தொடர்நது 7:15 மணிக்கு பாலகணபதி, அங்காளம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம்நடைபெறும்.

அடுத்த 8:00 மணிக்கு தச தானம், தச தரிசனம், மகா அபிஷேகமும், 9:00 மணிக்கு அன்னதானமும் நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !