உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குரும்பபாளையம் சக்தி மாரியம்மன் கும்பாபிஷேகம்!

குரும்பபாளையம் சக்தி மாரியம்மன் கும்பாபிஷேகம்!

சூலுார் : குரும்பபாளையம் சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
இருகூர் அடுத்த குரும்பபாளையம் சக்தி மாரியம்மன் கோவில் திருப்பணிகள் நடந்து, நேற்று
முன்தினம் கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் துவங்கின. முதல் கால ஹோமம், பூர்ணாஹுதி நடந்தது.நேற்று காலை இரண்டாம் கால ஹோமம் முடிந்து, பூஜிக்கப்பட்ட புனிதநீர் கலசங்கள் கோவிலை மேள, தாளத்துடன் வலம் வந்தன. காலை, 7:30 மணி முதல், 8:30 மணிக்குள் விமானம், சக்தி மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தச தானம், தச தரிசனம், மஹா அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !