சிவசுப்ரமணியர் கோவிலில் நாளை காவடி உற்சவம்!
புதுச்சேரி: வில்லியனுார் சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச காவடி விழா நாளை
நடக்கிறது.
வில்லியனுார் சுந்தரமூர்த்தி விநாயகபுரம் (மேற்கு) பகுதியில் உள்ள வள்ளி தேவசேனா சமேத
சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில், 12ம் ஆண்டு தைப்பூச விழா மற்றும் 108 காவடி பால்குட உற்சவம் நேற்று துவங்கியது. காலை 9.00 மணிக்கு மேல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
நாளை 3ம் தேதி காலை 7.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், 8.30 மணிக்கு முருகன் கோவிலில் இருந்து காவடி புறப்பாடு, 11.00 மணிக்கு முருகருக்கு சிறப்பு அபிஷேகம், 12.00 மணிக்கு அன்னதானம், இரவு 7.00 மணிக்கு தங்க கவச அலங்காரத்தில் சுவாமி கோவில் உள் புறப்பாடு நடக்கிறது. வரும் 5ம் தேதி இரவு 7.00 மணிக்கு, இடும்பனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பாலசுப்ரமணிய குருக்கள் மற்றும் உற்சவதாரர்கள் செய்துள்ளனர்.