உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாளை தைப்பூச திருவிழா!

நாளை தைப்பூச திருவிழா!

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில், 9ம் ஆண்டு, தைப்பூச திருவிழா, நாளை நடைபெற உள்ளது.

ஊத்துக்கோட்டையில், ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு, தைப்பூச திருவிழா, நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி, அன்று காலை 6:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் உள்ள மகா கணபதிக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். காலை 7:00 மணிக்கு, வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு, 108 பால்குட அபிஷேகம் நடைபெறும். முன்னதாக, பக்தர்கள் கொண்டு வரும் பாலை கொண்டு, அபிஷேகம் நடைபெறும். பின், உற்சவர் சிறப்பு அலங்காரத்தில், மங்கள வாத்தியம் முழங்க, அங்குள்ள முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !