விஷராஜா கோயில் கும்பாபிஷேகம்!
உத்தமபாளையம் : உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானம்பிகை கோயில் வளாகத்தில்
எழுந்தருளியுள்ள விஷராஜா கோயில் மகாகும்பாபிஷேகம் நடந்தது.
தென்காளஹஸ்தி என்று பெயர் பெற்றதும், ராகு கேது தோஷ நிவர்த்தி ஸ்தலமாகவும் விளங்குவது காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயில். இந்த கோயில் முன்பாக விஷராஜா கோயில் உள்ளது.
விஷராஜா சிலைக்கு பாதுகாப்பில்லாமல் இருந்தது.சமீபத்தில் திருக்காளாத்தீஸ்வரர் சேவை
அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் விஷராஜா கோயிலை கட்டினர். அந்த கோயில் மகாகும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது.முன்னதாக அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி முதல்கால யாக பூஜைகள் நிறைவு பெற்றது. நேற்று அதிகாலை முதல் யாக குண்டங்களில் சிறப்பு வழிபாடுகளும், ஆராதனைகளும் நடத்தப்பட்டது. தொடர்ந்து கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விஷராஜாவிற்கு தேன், பன்னீர், நெய், பால் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.