உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை கோவில்களில் தைப்பூச விழா சிறப்பு பூஜை!

உடுமலை கோவில்களில் தைப்பூச விழா சிறப்பு பூஜை!

உடுமலை : உடுமலை மற்றும் சுற்றுப்புறங்களில் தைப்பூசத்தை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது; ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள முருகன் சன்னதியில், சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை நடந்தது. அமராவதி நகரில் உள்ள முருகன் கோவிலில், நேற்று காலை செல்வ கணபதி ேஹாமம், துர்க்கா ேஹாமம், லட்சார்ச்சனை, சுமங்கலி பூஜை, திருவிளக்கு பூஜை நடந்தது. சுவாமிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.மடத்துக்குளம், பாப்பான்குளம், ஞானதண்டாயுதபாணி கோவிலில், தைப்பூச விழாவை முன்னிட்டு, விக்னேஸ்வர பூஜை, பஞ்ச கவ்ய பூஜை, கோபூஜை, காவடி-பால் குடங்களுக்கு பூஜையும் செய்யப்பட்டு, பால் காவடி எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து, ஞான விநாயகர், ஞான தண்டாயுதபாணிக்கு பால் அபிேஷகம், சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டு மகா தீபாராதனை நடந்தது.

உடுமலை தளி ரோட்டில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் நேற்று காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தன. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். எலையமுத்தூர் பிரிவு, புவன கணபதி கோவிலில் உள்ள முருகன் சன்னதியில் சுவாமிக்கு, சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது. இதேபோல், உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கோவிலிகளில் நேற்று காலை முதல் சிறப்பு பூஜை நடந்தது; ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !