உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி முத்துமாரியம்மன் கோவிலில் தேர் உற்சவம்!

புதுச்சேரி முத்துமாரியம்மன் கோவிலில் தேர் உற்சவம்!

புதுச்சேரி முத்துமாரியம்மன் கோவில் விழாவில், தேர் உற்சவம் நேற்று நடந்தது.
புதுச்சேரி முத்துமாரியம்மன் கோவில் வீதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் பெருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையடுத்து, தினமும் காலை 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் ரதோற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். மாலை 6:00 மணிக்கு விடையாற்றி உற்சவம் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி கோதண்டபாணி மற்றும் பொதுமக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !