உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈஸ்வரன் கோவிலில் திருப்பணி!

ஈஸ்வரன் கோவிலில் திருப்பணி!

திருப்பூர் : திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேகத்துக்காக திருப்பணி
துவக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் உள்ள புகழ்பெற்ற விஸ்வேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த
தீர்மானிக்கப்பட்டுள்ளது. அற நிலை யத்துறை மற்றும் கோவில் திருப்பணி நிதியில் இருந்து
சனீஸ்வரர் சன்னதி புதுப்பித்தல், நந்தி மண்டபம் புதுப்பித்தல், மகா மண்டபம் உள்ளிட்ட கல்
கட்டுமானங்கள் சுத்தம் செய்து, "பாலி யூரித்திலீன் வாஷ் செய்தல், பழுதான பகுதிகளில் கிரானைட் பதித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தவிர, பக்தர்கள் வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்யும் வகையில், தடுப்பு அமைத்தல், வர்ணம் பூசுதல், மின் உபகரணம் மாற்றுதல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள், 50 லட்சம் ரூபாயில் நடக்கிறது. ஏப்., மாதத்துக்குள் திருப்பணியை முடித்து, கும்பாபிஷேகம் நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !