பத்ரகாளியம்மன் கோவில் விழாவில்குண்டம் இறங்கி பக்தர்கள் வழிபாடு!
ராசிபுரம்:பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ராசிபுரம் அடுத்த மேட்டுக்காட்டில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் ஆண்டு தோறும் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு விழா, நேற்று முன்தினம் பால்குடம் ஊர்வலத்துடன் துவங்கியது.ஸ்வாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது. நேற்று, அதிகாலை, 5 மணி முதல் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அலகு குத்தியும், கரகம் எடுத்தும் பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர். மாலை, 4 மணிக்கு குண்டம் இறங்கும் விழா நடந்தது.சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ குண்டம் இறங்கிஅம்மனுக்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். மாலை, 6 மணிக்கு எருமை கிடா வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. அம்மன் சன்னதி எதிரே மெகா சைஸ் குழி வெட்டி, அதில் கோவிலுக்கு நேர்ந்து
விடப்பட்ட எருமை கிடாவை வெட்டி குழியில் போட்டு மூடப்பட்டது.
தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. இன்று (ஃபிப்., 5) இரவு, 8 மணிக்கு
சத்தாபரணத்தையொட்டி அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் ஸ்வாமி திருவீதி உலா வந்து
பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாளை, (ஃபிப்., 6) காலை மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.