காரியகாளியம்மன் கோவில்; குண்டம் இறங்கிய பக்தர்கள்!
ADDED :4253 days ago
கோபி:கோரக்காட்டூர், கரியகாளியம்மன் கோவிலில், நேற்று காலை, பக்தர்கள் குண்டம் இறங்கினர்.கோபி, வெள்ளாங்கோவில் அருகே கோரக்காட்டூர் கிராமத்தில், பழமை வாய்ந்த அருட்கரிய காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் விழா, கடந்த, 21ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது.கடந்த, 2ம் தேதி கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக, குண்டம் இறங்கும் நிகழ்ச்சி, நேற்று அதிகாலை, 6 மணிக்கு நடந்தது. கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த, 40 அடி குண்டத்தை, தலைமை பூசாரி சண்முகம் இறங்கினார். அதற்கு பின் பக்தர்கள் வரிசையாக குண்டம் இறங்கினர்.அப்பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் குண்டம் இறங்கி, நேர்த்தி கடன் செலுத்தினர்.