கும்பாபிஷேக விழாபூஜை நேற்று துவக்கம்!
ADDED :4060 days ago
ஈரோடு:ஈரோடு அடுத்த எலவமலை, கரை எல்லப்பாளையம் புவனமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா பூஜைகள் நடந்து வருகிறது.
கடந்த, 26ம் தேதி கால்கோல் விழாவுடன் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.
நேற்று இரவு, ஒரு மணிக்கு கிராமசாந்தி பூஜை துவங்கியது. இன்று விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், காலை, 7 மணிக்கு கூடுதுறையில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வருதலும், 7ம் தேதி காலை 7 மணிக்கு ஹோமங்களும், மாலை 5 மணிக்கு யாகவேள்வி பூஜையும் நடக்கிறது.தொடர்ந்து யாக வேள்விகள் நடக்கிறது. 9ம் தேதி காலை, 6 மணிக்கு விநாயகப்பெருமான் கோபுர கலசம் மற்றும் விநாயகப்பெருமானுக்கு மகா கும்பாபிஷேகமும், 9 மணிக்கு மூலாலய கோபுரத்துக்கும், புவனமாரியம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது.காலை முதல் அன்னதானம் வழங்கப்படுகிறது.