எமனேஸ்வரம் ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா; மார்ச் 28ல் திருக்கல்யாணம்
ADDED :206 days ago
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் ஆஞ்சநேய பெருமான் கோயில் ராம நவமி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. மார்ச் 19ல் விழா துவங்கியது. தினமும் பஜனை மற்றும் பல்வேறு அவதாரங்களில் ராமர், சீதை, லட்சுமணன், அனுமன் எழுந்தருள்வர். மார்ச் 26 மாலை உலக நன்மைக்காகவும், புத்திர பாக்கியம் வேண்டும் தம்பதியர்களுக்கு புத்திர காமேஷ்டி யாகம் நடக்கிறது. புத்திர பாக்கியம் வேண்டுபவருக்கு பாயாசம் பிரசாதமாக வழங்கப்படும். மார்ச் 27ல் ராம நவமி விழாவும், மார்ச் 28 மாலை சீதா ராமர் திருக்கல்யாணம் நடக்கிறது. மார்ச் 29 இரவு பூ பல்லக்கில் சுவாமி வீதி வலம் வருவார். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிர தர்ம பரிபாலன சபையினர் செய்துள்ளனர்.