உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் உழவாரப்பணி

நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் உழவாரப்பணி

நத்தம்; நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி அம்மன் கோவிலில் நத்தம் சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் உழவார பணிகள் நடந்தது.இதில் கோவிலில் உள்ள மூலவர் சன்னதி மற்றும் விநாயகர், முருகன், பைரவர், தட்சிணாமூர்த்தி, நாகம்மாள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் கிடந்த குப்பைகள் அகற்றபட்டு கோவில் பிரகாரத்தில் இருந்த செடி, கொடிகள் அகற்றபட்டது.இந்த பணியில் நத்தம் சிவனடியார்கள் கூட்டமைப்பை சேர்ந்த தொண்டர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !