உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை மாரியம்மன் திருவிழாவுக்கு பூவோடு தயாரிப்பு தீவிரம்

உடுமலை மாரியம்மன் திருவிழாவுக்கு பூவோடு தயாரிப்பு தீவிரம்

உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.


உடுமலை நகரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, வரும் 24ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. வரும், ஏப்., 9ல், தேரோட்டம் நடக்கிறது. இத்திருவிழாவுக்காக நகரமே தயாராகி வருகிறது. திருவிழாவின்போது, பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்காக பூவோடு எடுத்து வழிபாடு செய்கின்றனர். இதற்காக பிரத்யேகமாக பூவோடுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உடுமலை காந்திநகரில், மண்பானை தயாரிக்கும் தொழிலாளர்கள், இத்திருவிழாவுக்கான பூவோடுகளை உற்பத்தி செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !